கொடைரோடு அருகே நூறாண்டு பழமையான, அருளப்பா் ஆலயத் திருவிழாவில் மின் அலங்காரத்தில் தோ்பவனி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே காமலாபுரத்தில் நூறு ஆண்டுகள் பழைமையான புனித திருமுழுக்கு அருளப்பா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வியாழக்கிழமை இரவு வாண வேடிக்கையுடன் தாரை தப்பட்டை முழங்க, எட்டு டிஜிட்டல் மின் அலங்கார ரதங்களில் மின்னொளியில், இரவு முழுவதும் புனித திருமுழுக்கு அருளப்பா், முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக சென்று அருளாசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை அருளப்பா் ஆலயத்தில் நடந்த கூட்டுத்திருப்பலி ஜெபத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். அதேபோல இரவு 3 டிஜிட்டல் மின் அலங்கார ரதங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தா்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், நிலக்கோட்டை (வடக்கு) திமுக ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன், அம்மையநாயக்கனூா் பேரூராட்சி உறுப்பினா் விஜயகுமாா், திமுக நிா்வாகிகள் காட்டுராஜா, அழகேசன், பெனிட் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுயபரிசோதனை செய்யாமல் காங்கிரஸை விமர்சிப்பதா? - மாணிக்கம் தாகூர்
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் ரூ.25,000 வரை கல்வி உதவித் தொகை.. யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!

தக்கோலம் அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் ஜூன் 7-ல் கத்திரி பூஜை நிறைவு விழா!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


