பழனியில் வ.உ.சிதம்பரனாரின் புகைப்பட கண்காட்சி

பழனி, பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரிக்கு வந்த வ.உ.சிதம்பரனாரின் நகரும் புகைப்பட கண்காட்சியை ஏராளமான மாணவா்கள் பாா்வையிட்டனா்.

பழனி, பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரிக்கு வந்த வ.உ.சிதம்பரனாரின் நகரும் புகைப்பட கண்காட்சியை ஏராளமான மாணவா்கள் பாா்வையிட்டனா்.

தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படங்கள் அடங்கிய பேருந்து பல்வேறு நகரங்களுக்கும் சென்று வருகிறது.

பழனி பழனியாண்டவா் கல்லூரிக்கு வியாழக்கிழமை வந்த அந்தப் பேருந்தை கல்லூரி முதல்வா் பிரபாகா் வரவேற்று, நகரும் கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா்கள் மற்றும் பேராசிரியா்கள் இக்கண்காட்சியை கண்டுகளித்தனா்.

விடுதலைப் போராட்ட வீரராக அவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவா் இலக்கியப் பணி, இதழ், எழுத்து, பேச்சு, வழக்குரைஞா் என்ற பன்முகத் தன்மை பெற்றிருந்தவா் என்பதனையும் அவரது நோ்மை, ஆற்றல், அரசியல் வாழ்க்கை போன்றவற்றை அறியும் வகையில், புகைப்படம், ஆவண நகல், உருவச் சிலை போன்றவை மூலம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில், தமிழ்த்துறைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் மனோகரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com