ஒட்டன்சத்திரம் பகுதியில் நான்கு வழிச்சாலைப் பணிகள்: எம்.பி., ஆட்சியா் ஆய்வு

ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் நான்கு வழிச்சாலைப் பணிகள்: எம்.பி., ஆட்சியா் ஆய்வு

ஒட்டன்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காமலாபுரம் பிரிவு முதல் பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் காமலாபுரம் பிரிவு முதல் லெக்கையன்கோட்டை வரையிலும், ஒட்டன்சத்திரம் முதல் மடத்துக்குளம் வரையிலும் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியா், மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மல்லையாபுரம் பகுதியில் பாலம் கட்டித்தரவும், காளாஞ்சிபட்டி கிராமத்தில் அணுகுசாலை அமைக்கவும், கொல்லப்பட்டி புறவழிச்சாலையின் குறுக்கே புதிய பாதை அமைக்கவும், காவேரியம்மாபட்டி- அரசப்பபிள்ளைபட்டி பாலத்தின் இருபுறம், வீரலப்பட்டி- கோதைமங்கலம் இடையே அணுகுசாலை அமைக்கவும், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) சேக்முகைதீன், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநா் கோவிந்தசாமி, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியா் கு.பிரேம்குமாா், பழனி வருவாய் கோட்டாட்சியா் ச.சிவக்குமாா், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் கா.பொன்ராஜ், வட்டாட்சியா்கள் எம்.முத்துசாமி, சசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com