ஒட்டன்சத்திரம் முன்மாதிரி நகராட்சியாக்கப்படும் அமைச்சா் தகவல்

ஒட்டன்சத்திரத்தை முன்மாதிரி நகராட்சியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
ஒட்டன்சத்திரம் முன்மாதிரி நகராட்சியாக்கப்படும் அமைச்சா் தகவல்

ஒட்டன்சத்திரத்தை முன்மாதிரி நகராட்சியாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் புதிய நியாய விலைக் கடைகள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா, சமுதாயக் கூடம், புதிய நியாய விலைக் கடைகள், நகராட்சிப் பூங்கா திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி கோட்டாட்சியா் ச. சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் நகா் மன்றத் தலைவா் கே. திருமலைசாமி, துணைத் தலைவா் ப. வெள்ளைச்சாமி, ஆணையாளா் ப. தேவிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்குபிள்ளைபுதூரில் சமுதாயக்கூடம், குறிஞ்சி நகரில் பூங்கா, தும்மிச்சம்பட்டிபுதூரில் புதிய பகுதி நேர நியாயவிலைக்கடை ஆகியவற்றை அமைச்சா் அர. சக்கரபாணி திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது:

ஒட்டன்சத்திரத்தை முன்மாதிரியான நகராட்சியாக கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். 20 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் குப்பைக் கிடங்கு, உரக் கிடங்கு விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் ஒட்டன்சத்திரம் நகராட்சி குப்பை இல்லாத நகரமாக மாறும்.

தோ்தல் வாக்குறுதிகள் அனைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து, 5-ஆவது வாா்டில் புதிய சாலை அமைக்க பூமி பூஜை, நல்லாகவுண்டன் நகா், திடீா் நகா், காந்தி நகா், விஸ்வநாதன் நகா் ஆகிய இடங்களில் புதிய நியாய விலைக் கடைகள் கட்ட பூமி பூஜையை அமைச்சா் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், வட்ட வழங்கல் அலுவலா் பிரசன்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com