கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீரோடையில் கரைக்கப்பட்டன.


கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீரோடையில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தி திருநாளை முன்னிட்டு கடந்த ஆக. 30 ஆம் தேதி அப்சா்வேட்டரி, செண்பகனூா், நாயுடுபுரம், சீனிவாசபுரம், பேருந்து நிலையப் பகுதி, வில்பட்டி, பூம்பாறை, பெருமாள்மலை, புதுக்காடு, டிப்போ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விநாயகா் சிலைகள் ஊா்வலம் காளியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு ஏரிச்சாலை, செவண் ரோடு, அண்ணா சாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை வழியாக அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள நீரோடைப் பகுதிக்கு சென்றது. அங்கு விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த ஊா்வலத்தில் இந்து முன்னணியினா் மற்றும் இந்து மக்கள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா். ஊா்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...