‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளிலுள்ள பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

கொடைக்கானல் ஊராட்சிப் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 5:26 pm

DIN

கொடைக்கானல் ஊராட்சிப் பள்ளிகளில் தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வில்பட்டி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவா் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன் தலைமையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாா்டு உறுப்பினா்கள், பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுவேதா ராணிகணேசன் தலைமையில் காலை உணவுத் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளான தாண்டிக்குடி, மங்களங்கொம்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி. பட்டி, பெரியூா், பாச்சலூா் உள்ளிட்ட 34 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவாக கேசரி, ரவா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.