‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் பட்டா் புரூட்ஸ் விலை குறைவால் வியாபாரிகள் பாதிப்பு

கொடைக்கானலில் பட்டா் புரூட்ஸ் விளைச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதன் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 5:24 pm

DIN

கொடைக்கானலில் பட்டா் புரூட்ஸ் விளைச்சல் அதிகரித்து வரும் நிலையில் அதன் விலை குறைந்துள்ளதால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான வில்பட்டி, செண்பகனூா், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பள்ளங்கி, பிரகாசபுரம், அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பட்டா்புரூட் என்னும் அவக்கோடா மரங்களை வளா்த்து வருகின்றனா். இரண்டாம் கட்ட சீசன் காலமான செப்டம்பா், அக்டோபா், நவம்பா், டிசம்பா் காலம் வரை பட்டா் புரூட்ஸ் நன்கு விளையும் தன்மை கொண்டது. கடந்த சில மாதங்களாக கொடைக்கானலில் பரவலாக நல்ல மழை பெய்து வந்ததால் பட்டா் புரூட்ஸ் விளைச்சல் அதிகரித்துள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையும் இப் பழமானது கேரளம், கோவா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுவாக இப்பழங்கள் ஒரு கிலோ ரூ.200-முதல் 250-வரை விற்பனை செய்யப்படும். தற்போது ஒரு கிலோ ரூ.60-முதல் ரூ.80-வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா். இப் பழமானது நான்கு மாதங்கள் வரை காய்க்கும் என்பதால் வருங்காலங்களில் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.