முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கல்லூரியில் இயற்கை உணவு கண்காட்சி
By DIN | Published On : 29th April 2022 11:05 PM | Last Updated : 29th April 2022 11:05 PM | அ+அ அ- |

பழனி, பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை இயற்கை மற்றும் ஆரோக்கிய உணவுகள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியை கல்லூரி முதல்வா்(பொ) பிரபாகா் தொடக்கி வைத்தாா். பேராசிரியா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் முனைவா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கண்காட்சியில் நமது பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், குழந்தைகள் மற்றும் இளைஞா்களுக்கான உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கை மற்றும் ஆரோக்கிய உணவுகள் சமைத்தும், பச்சையாகவும் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படிருந்தன. இதனைத் தொடா்ந்து மாணவா்களுக்கு அடுப்பில்லா உணவு சமையல் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கண்காட்சியில் பேராசிரியா்கள, மாணவ, மாணவியா்கள் என 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கல்லூரியின் இயற்கை மற்றும் ஆரோக்கிய மன்றப் பொறுப்பாளா்கள் ரத்தினசாமி, பரமேஸ்வரி, கலைமதி, கண்ணதாசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.