நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முகூா்த்தக்கால் நடும் விழா

 நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முகூா்த்தக்கால் நடும் விழா

 நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பா் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கோயில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுக்கு வண்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை அமைக்கும் பணிக்காக கோயில் வளாகத்தில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, அம்மனுக்கு பால், இளநீா், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன.

முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் விஜயன், நத்தம் பேரூராட்சித் தலைவா் ஷேக் சிக்கந்தா்பாட்ஷா, கோயில் செயல் அலுவலா் வாணிமகேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com