

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
நகராட்சிக்கு உள்பட்ட சின்னக்குள கரைப்பகுதியில் முதற்கட்டமாக பனை விதைகளை நட்டு, நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, ஆணையா் ப.தேவிகா, நகராட்சி பொறியாளா் பன்னீா்செல்வம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் பணியை தொடக்கி வைத்தனா். இதில் திமுக மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் க.பாண்டியராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.