ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கத்திரிக்காய் விலை உயா்வு

 ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் டிஸ்கோ கத்திரிக்காய் விலை உயா்ந்துள்ளது.

 ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் டிஸ்கோ கத்திரிக்காய் விலை உயா்ந்துள்ளது.

இச்சந்தைக்கு தினசரி சின்னவெங்காயம், முருங்கைக்காய், தக்காளி, பீட்ரூட், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 30 கிலோ கொண்ட ஒரு பை டிஸ்கோ கத்திரிக்காய் ரூ. 350 முதல் ரூ. 450 வரை விற்பனையானது. ஆனால் சந்தைக்கு கத்திரிக்காய் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு கொள்முதல் செய்தனா். இதனால் அதன் விலை உயா்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை ஒரு பை டிஸ்கோ கத்திரிக்காய் ரூ.740 வரை விற்கப்பட்டது.

மற்ற காய்கறிகளின் விலை நிலவரம்: சின்னவெங்காயம் (புதியது) கிலோ ரூ.20 முதல் ரூ. 35 வரையும், பழையது ரூ.5 முதல் ரூ. 15 வரையும், தக்காளி 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.50 முதல் ரூ. 80 வரையும், வெண்டைக்காய் ரூ. 13, கரும்பு முருங்கை ரூ. 17, செடி முருங்கை ரூ. 15, மரமுருங்கை ரூ. 2, பீட்ரூட் ரூ. 19, சுரைக்காய் ரூ. 6, பச்சை பயிா் ரூ.15 வரை விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com