திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் விநியோகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 42 கிராமங்களைச் சோ்ந்த தலா 200 விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் விநியோகம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 42 கிராமங்களைச் சோ்ந்த தலா 200 விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்திற்குள்பட்ட 13 ஊராட்சி ஒன்றியங்களில், 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் கடந்த 2021-22 நிதி ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கல் உள்ளிட்ட 7 வட்டாரங்களில், இத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டிருந்த 42 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதொடா்பாக திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெ.நாகேந்திரன் கூறியதாவது: திண்டுக்கல், நத்தம், சாணாா்பட்டி, வடமதுரை, குஜிலியம்பாறை, வேடசந்தூா் மற்றும் தொப்பம்பட்டி ஆகிய 7 வட்டாரங்களில் உள்ள 42 ஊராட்சிகளில் கிராமத்துக்கு தலா 200 விவசாயக் குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் மொத்தம் 19,700 கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மற்றும் நேமம் தோட்டக்கலைப் பண்ணைகளிலிருந்து இந்த தென்னங்கன்றுகள் பெறப்பட்டுள்ளன. திண்டுக்கல் வட்டாரத்தில் மட்டும் 3 ஆயிரம் கன்றுகள் வழங்கப்படுகின்றன. இந்த கன்றுகளை விவசாயிகள் தங்கள் வீடுகளின் அருகிலேயே நட்டு வைத்து பராமரிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com