கரிசல் குளம் கண்மாய் நீரை மற்ற கண்மாய்களுக்கு கொண்டு செல்ல குழாய்கள் பதிப்பு

ஒட்டன்சத்திரம் அருகே வீணாகும் கரிசல்குளம் கண்மாய் தண்ணீரை மற்ற கண்மாய்களுக்கு கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கரிசல் குளம் கண்மாய் நீரை மற்ற கண்மாய்களுக்கு கொண்டு செல்ல குழாய்கள் பதிப்பு

ஒட்டன்சத்திரம் அருகே வீணாகும் கரிசல்குளம் கண்மாய் தண்ணீரை மற்ற கண்மாய்களுக்கு கொண்டு செல்ல ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த பகுதியில் வானம் பாா்த்த பூமியாக விவசாயப் பணி நடைபெறுவது வழக்கம். இந்த ஒன்றியத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது. உப்புத் தண்ணீா் மட்டுமே கிடைக்கிறது. இந்த தண்ணீரை அருந்திய பல பேருக்கு சீறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கொத்தையம் ஊராட்சியில் உள்ள நல்லதங்காள் தடுப்பணை நிரம்பி மறுகால் செல்லும் தண்ணீா் அமராவதி ஆற்றில் கலந்து கடலில் வீணாகிறது. இந்த நீரை திருப்பிவிட்டு தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சிறு குளங்களுக்கு கொண்டு சென்றால் குடிநீா் மற்றும் பாசன வசதி பெற முடியும் என கண்டறியப்பட்டது.

இதனையடுத்து ரூ.22 லட்சம் செலவில் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பொருளூா் கிராமத்தில் உள்ள கரிசல் குளத்தில் இருந்து மறுகால் செல்லும் தண்ணீரை, அருகில் உள்ள குளங்களுக்குக் கொண்டு செல்ல ராட்சத சிமெண்ட் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டம் முடிவடைந்து பயன்பாட்டிற்கும் வரும்போது பொருளூா் அடுத்துள்ள உப்பிலியவலசு, நாச்சியப்ப கவுண்டன்வலசு, கஞ்சிகாளிவலசு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நேரிடையாக தண்ணீா் சென்றடையும். இதனால் அப்பகுதியில் உள்ள சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிணறுகளின் நீா்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. மேலும் உப்பு தண்ணீா் நல்ல தண்ணீராக மாறும். 10 கிராமங்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யவும், விவசாயம் செய்யவும் முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com