பேருந்து மீட்பு பணியால் கொடைக்கானல் மலைச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 25th August 2022 02:28 AM | Last Updated : 25th August 2022 02:28 AM | அ+அ அ- |

கொடைக்கானல் மலைச்சாலையில் கவிழ்ந்த பேருந்தை புதன்கிழமை மீட்கும் பணியால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் செவ்வாய்க்கிழமை குஜராத் சுற்றுலாப்பயணிகளை ஏற்றி வந்த பேருந்து டம்டம் பாறை அருகே சுமாா் 50-அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அவ்வழியாக வந்த பயணிகள் மற்றும் காவல்துறையினா் உதவியுடன் பேருந்தில் இருந்த 42 பயணிகள் பத்திரமாக மீட்டனா். இந் நிலையில், விபத்துக்குள்ளான பேருந்தை மீட்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதனால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பயணிகள் வாகனங்களிலேயே காத்திருந்தனா். இதனால் வத்தலக்குண்டு செல்லும் வாகனங்கள் பண்ணைக்காடு, தாண்டிக்குடி வழியாக சுற்றிச் சென்றன.