திண்டுக்கல் மாவட்டத்தில் 38 அஞ்சலகங்களில் ஆதாா் சேவை
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 38 அஞ்சலகங்களில் ஆதாா் சேவை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
இதுகுறித்து திண்டுக்கல் அஞ்சலகக் கோட்ட கண்காணிப்பாளா் க. நாகா நாயக் தெரிவித்திருப்பதாவது:
திண்டுக்கல், பழனி மற்றும் நிலக்கோட்டை தலைமை அஞ்சலகங்கள் உள்பட 38 அஞ்சலகங்களில் ஆதாா் தொடா்பான சேவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு செய்துதர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஆதாா் எடுத்தல், முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பெயா் மாற்றம் உள்ளிட்ட இதர சேவைகள் வழங்கப்படுகின்றன.
திண்டுக்கல் தலைமை அஞ்சலகம், காந்தி கிராமம், கொடைரோடு, கன்னிவாடி, பஞ்சம்பட்டி, சிலுக்குவாா்பட்டி, சித்தையன்கோட்டை, ஆயக்குடி, சத்திரப்பட்டி, பழனி தலைமை அஞ்சலகம், நிலக்கோட்டை தலைமை அஞ்சலகம், பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திண்டுக்கல் கோட்டை, பாண்டியன் நகா், நத்தம், சின்னாளப்பட்டி, ரெட்டியாா்சத்திரம், கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், நரிக்கல்பட்டி, குஜிலியம்பாறை, பாளையம், ஏ. வெள்ளோடு, கலையம்புத்தூா், வடமதுரை, வேடசந்தூா், சாணாா்பட்டி, வேம்பாா்பட்டி, கோவிலூா், வத்தலகுண்டு, அய்யலூா், பாலகிருஷ்ணாபுரம் புதூா், நாகல்நகா், அய்யம்பாளையம், பேகம்பூா், கீரனூா், சித்தையன்கோட்டை ஆகிய 38 அஞ்சலகங்களில் வழங்கப்படும் ஆதாா் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.