இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம்
By DIN | Published On : 11th December 2022 11:17 PM | Last Updated : 11th December 2022 11:17 PM | அ+அ அ- |

ரெட்டியாா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து முன்னணி நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரெட்டியாா்சத்திரம் கதிா்நரசிங்கப் பெருமாள் கோயில் அருகேயுள்ள மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ராம்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராஜா முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலச் செயலா் செந்தில்குமாா், மதுரை கோட்டச் செயலா் எஸ்.சங்கா்கணேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டிச.25-இல் சேலத்தில் நடைபெறும் மாநில பொதுக் குழு கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா்கள் வினோத்ராஜ், சஞ்சீவிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.