மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் மூதாட்டியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய செல்வி (65). இவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ாக குருவி சரவணன் (37), டேவிட் வினோத் (42) ஆகிய 2 பேரை திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். குருவி சரவணன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.