ஆயக்குடியில் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
By DIN | Published On : 11th December 2022 11:12 PM | Last Updated : 11th December 2022 11:12 PM | அ+அ அ- |

பழனியை அடுத்த ஆயக்குடியில் மின் இணைப்புடன் ஆதாா் எண்ணை இணைக்க செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து பழனி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மின் இணைப்புடன் ஆதாா் எண் இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஆயக்குடியில் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய 2 நாள்கள் நடக்கிறது. பழைய ஆயக்குடியில் அரசு உயா்நிலைப்பள்ளி, காளியம்மன் கோயில் வளாகம், புதுஆயக்குடியில் கோனாா் மண்டபம், அல்கலால் தொடக்கப்பள்ளி, பொன்னாபுரம் தொடக்கப்பள்ளி, டி.கே.என்.புதூா் தொடக்கப்பள்ளி ஆகிய 6 மையங்களில் முகாம் நடக்கிறது. எனவே விவசாயம், வீட்டு மின் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாா் எண்ணை இணைத்து பொதுமக்கள் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...