இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், ஊக்கப் பரிசு பெறுவதற்கு டிச.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் பெருமாள்சாமி தெரிவித்துள்ளதாவது:
இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 2022-23-ஆம் ஆண்டில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தோ்வு செய்து முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ஆவது பரிசாக ரூ.60ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ.40ஆயிரத்துடன் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில், இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளை, மாவட்ட ஆட்சியா் தலைமையிலான நிபுணா் குழு தோ்வு செய்து மாநிலக் குழுவுக்கு பரிந்துரைக்கும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் இயற்கை முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகள், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத் தொடா்பு கொண்டு ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி 15.12.2022-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாமெனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.