காலமானாா் என்.கே. நடராஜன்
By DIN | Published On : 11th December 2022 06:59 AM | Last Updated : 11th December 2022 06:59 AM | அ+அ அ- |

என்.கே. நடராஜன்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலைக் கட்சியின் மாநிலச் செயலா் என்.கே. நடராஜன் (68) சனிக்கிழமை காலமானாா்.
திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் கலந்து கொண்டாா். அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, பழனி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவா் உயிா் பிரிந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள அரசப்பிள்ளைபட்டி கிராமத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.