பாரதியாா் பிறந்த தின விழா
By DIN | Published On : 11th December 2022 11:13 PM | Last Updated : 11th December 2022 11:13 PM | அ+அ அ- |

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சாா்பில் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரின் 141-ஆவது பிறந்த தினம், மூதறிஞா் ராஜாஜியின் 145-ஆவது பிறந்த தினம், எருக்கூா் நீலகண்ட பிரம்மச்சாரியின் 134-ஆவது பிறந்த தினம், குதிர்ராம் போஸின் 134-ஆவது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிவாஜி மன்ற பொதுச் செயலா் மா.காளிதாஸ் தலைமை வகித்தாா். இளைஞா் பிரிவுத் தலைவா் நா.விஜய் முன்னிலை வகித்தாா். தமிழ் மாமன்றத் தலைவா் ஆ.ராமசாமி சிறப்புரை நிகழ்த்தினாா்.
மறைந்த தலைவா்களின் உருவப் படங்களுக்கு மலா் அஞ்சலி செலுத்தி புகழாரம் சூட்டப்பட்டது. பின்னா், காசி தமிழ் சங்கம் மூலம் பாரதியாருக்கு உலக அளவில் பெருமை சோ்ந்த பிரதமா் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் எருக்கூா் நீலகண்ட பிரம்மச்சாரி பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க வலியுறுத்தியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சு.வைரவேல், மோ.தங்கபாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...