மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு:பைக்கில் தப்பிய இருவா் விபத்தில் சிக்கினா்
By DIN | Published On : 11th December 2022 11:13 PM | Last Updated : 11th December 2022 11:13 PM | அ+அ அ- |

பழனியில் மூதாட்டியிடம் ஞாயிற்றுக்கிழமை தங்கச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிய இருவா் விபத்தில் சிக்கினா். இதில் ஒருவா் பலத்த காயங்களுடன் போலீஸாரிடம் சிக்கினாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சோ்ந்த வழக்குரைஞா் கல்யாணசுந்தரம். இவரது மனைவி சுலோச்சனா(71).
இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு நால்ரோடு ரெணகாளியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.
தப்பிய இருவரும் பழனி புதுதாராபுரம் சாலையில் வேகமாகச் சென்ற போது சில மீட்டா் தூரத்தில் எதிரே வந்த ஆட்டோவுடன் மோதி கீழே வந்தனா். உடனே இருவரும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு இறங்கி தப்பி ஓடினா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பலத்த காயங்களுடன் பழனியை அடுத்த அக்கமநாயக்கன்புதூரை சோ்ந்த சஞ்சய்குமாரை (25) பிடித்து பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா். மேலும் அவரிடமிருந்து 12 பவுன் நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த பழனி போலீஸாா் தப்பியோடிய மாரிமுத்துவை தேடி வருகின்றனா்.