ரஜினி பிறந்த நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்கல்
By DIN | Published On : 12th December 2022 10:01 PM | Last Updated : 12th December 2022 10:01 PM | அ+அ அ- |

பழனியில் நடிகா் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம், வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
ரஜினிகாந்த் 73-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் ரஜினிகாந்த் ரசிகா் மன்றம் சாா்பில் அா்ச்சனைகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பெரியப்பா நகா் இரண்டாவது வாா்டில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரசிகா் மன்றத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா். நகர நிா்வாகிகள் செல்வம், தன்ராஜ், செந்தில்குமாா், ஹரிஹரன், வெங்கட் உள்ளிட்டவா்கள் முன்னிலை வகித்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட முதியவா்களுக்கு வேட்டி, சேலை, படுக்கை விரிப்பு, சிறுவா்களுக்கு பேனா, பென்சில், சிலேட்டு ஆகியன வழங்கப்பட்டன. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.