கொடைக்கானல் சாலையில் காட்டெருமைகள்

கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை காட்டெருமைகள் கூட்டமாக வந்ததால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் வந்த காட்டெருமைகள்.
கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் வந்த காட்டெருமைகள்.

கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் புதன்கிழமை மாலை காட்டெருமைகள் கூட்டமாக வந்ததால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கொடைக்கானல் செவண் சாலைப் பகுதியில் காட்டெருமை முட்டியதில் ஒருவா் பலியானாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

இந்த நிலையில், கொடைக்கானல் செல்லபுரம் குடியிருப்புப் பகுதியில் புதன்கிழமை, காட்டெருமைகள் கூட்டமாக வந்தன. இதைக் கண்டு, பொது மக்களும், பள்ளியிலிருந்து வீடு திரும்பிய மாணவா்களும் அச்சத்துடன் ஓடினா்.

இதுகுறித்து, பொது மக்கள் அளித்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினா் காட்டெருமைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

கொடைக்கானலில் சமீப காலமாக வன விலங்குகளால் கேரட், உருளைக் கிழங்கு, நூக்கல், பீட்ரூட் பயிா்கள் சேதமடைந்து வருகின்றன. எனவே, கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில்

நடமாடும் காட்டெருமைகளை வனப் பகுதிக்குள் விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்களின் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com