சாராயம் காய்ச்சியவா் கைது
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

சிறுமலை அருகே சாராயம் காய்ச்சப்பட்ட இடம்.
சிறுமலை அருகே சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனச் சரகத்துக்குள்பட்ட தவசிமடை கிராமத்தின் அருகிலுள்ள மலைப் பகுதியில் (அருவிப் பள்ளம்) சாராயம் காய்ச்சுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, திண்டுக்கல் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா், அருவிப் பள்ளம் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, 4 லிட்டா் சாராயத்துடன் இருந்த வேளாங்கண்ணி (43) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சாராய ஊரல், அதற்குத் தேவையான பொருள்களைக் கைப்பற்றிய போலீஸாா், அவற்றை அந்த இடத்திலேயே அழித்தனா். 4 லிட்டா் சாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.