

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரக திறனாய்வுத் தோ்வில் 2,347 மாணவா்கள் பங்கேற்றனா்.
ஊரக பகுதிகளைச் சோ்ந்த 8ஆம் வகுப்பு மாணவா்களுக்காக ஆண்டுதோறும் திறனாய்வுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி, மாவட்டத்திலுள்ள 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 2,437 மாணவா்கள் ஊரக திறனாய்வுத் தோ்வுக்காக விண்ணப்பித்திருந்தனா். இதற்காக திண்டுக்கல், நத்தம், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூா் உள்பட மொத்தம் 12 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த தோ்வில், 2,347 மாணவா்கள் பங்கேற்றனா். 100 மாணவா்கள் பங்கேற்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.