பழனி உழவா் சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
By DIN | Published On : 27th February 2022 11:34 PM | Last Updated : 27th February 2022 11:34 PM | அ+அ அ- |

பழனி திருவள்ளுவா் சாலை உழவா் சந்தையில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை ஞாயிற்றுக்கிழமை அகற்றிய போக்குவரத்து போலீஸாா்.
பழனி உழவா் சந்தையில் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகளை போக்குவரத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.
திருவள்ளுவா் சாலையில் உள்ள இந்த சந்தையில் காய்கறி, பழக்கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. அங்கு சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸாருக்கு புகாா்கள் வந்ததையடுத்து போக்குவரத்து ஆய்வாளா் மகேந்திரன் தலைமையில் சாா்பு- ஆய்வாளா்கள் தியாகராஜன், ராமா் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த கடைகளை அகற்றினா். முன்னதாக ஏராளமான வியாபாரிகள் தாங்களாகவே கடைகளை அகற்றிக் கொண்டனா். வரும் நாள்களில் ஆக்கிரமிப்புகள் தொடா்ந்தால் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸாா் எச்சரித்தனா்.