கோரிக்கடவில் இலவச கண் சிகிச்சை முகாம்
By DIN | Published On : 17th July 2022 11:01 PM | Last Updated : 17th July 2022 11:01 PM | அ+அ அ- |

பழனியை அடுத்த கோரிக்கடவு கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பாா்வையிழப்போா் தடுப்புச் சங்கம், கோரிக்கடவு ஊராட்சி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமை திமுக ஒன்றியச் செயலாளா் சுப்பிரமணி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் சத்தியபுவனா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில் கண்புரை, கண்ணீா் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப் பாா்வை, தூரப்பாா்வை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இந்த முகாமிற்கு கோரிக்கடவு, மானூா், நரிக்கல்பட்டி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனா்.