மண்டுகாளியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்
By DIN | Published On : 09th June 2022 12:00 AM | Last Updated : 09th June 2022 12:00 AM | அ+அ அ- |

வேலூா் மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் குழந்தைகளுடன் நோ்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தா்கள்.
பழனி: பழனியை அடுத்த கே.வேலூரில் உள்ள மண்டுகாளியம்மன் கோயிலில் புதன்கிழமை பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக்கோயிலில் மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. புதன்கிழமை பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தும் விழா நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனை வழிபட்டனா். சில பெண் பக்தா்கள் குழந்தைகள் பூக்குழி இறங்கினா்.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட காளியம்மன் மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.