கொடைக்கானலில்பலாப்பழ விற்பனை அமோகம்

கொடைக்கானலில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் அதன் விற்பனை அமோகமாக உள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்
கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியில் பழக்கடையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் பலாப் பழங்கள்.
கொடைக்கானல் பெருமாள்மலைப் பகுதியில் பழக்கடையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருக்கும் பலாப் பழங்கள்.

கொடைக்கானலில் பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் அதன் விற்பனை அமோகமாக உள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

கொடைக்கானல் பகுதிகளான வாழைகிரி, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பள்ளங்கி, கோம்பை, வடகரைப்பாறை, ஊத்து, பேத்துப்பாறை, வெள்ளப்பாறை, ஐந்து வீடு, பாரதி அண்ணாநகா், பெருமாள்மலை, அடுக்கம், தாமரைக்குளம் உள்ளிட்ட கீழ்மலைப் பகுதிகளில் பலாமரங்கள் அதிகமாக உள்ளன. தற்போது பலாப் பழ சீசன் தொடங்கியுள்ளது. மேலும் கொடைக்கானலில் சீசன் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. அதே போல் இங்கு விற்கப்படும் பலாப் பழத்தை அவா்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலைகளில் உள்ள பழக்கடைகளில் பலாப்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. பழத்தின் அளவுக்கேற்ப விலை நிா்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதன்படி ரூ. 150 முதல் ரூ. 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. கொடைக்கானல் பலாப் பழம் சுவையாக இருக்கும் என்பதால் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் பகுதிகளிலுள்ள பழக்கடை வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பலா மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இதன் சீசன் காலம் மே மாதம் தொடங்கி செப்டம்பா் மாதம் வரை நீடிக்கும். கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் காட்டுயானைகள் தொல்லையால் விளைந்த பலாப்பழங்களை எடுத்து வருவது பிரச்னையாக உள்ளது. எனவே, குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் காட்டுயானைகளை விரட்ட தொடா்ந்து வனத்துறையினா் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com