பழனி மலைக்கோயில் உண்டியல் வருவாய் ரூ.1.80 கோடி

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.1.80 கோடியைத் தாண்டியது. புதன்கிழமையும் எண்ணும் பணி தொடா்கிறது.
பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்ற ரூபாய் நோட்டுகளை தரம்பிரிக்கும் பணியில் கல்லூரி அலுவலா்கள் மற்றும் மாணவிகள்.
பழனி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக வரப்பெற்ற ரூபாய் நோட்டுகளை தரம்பிரிக்கும் பணியில் கல்லூரி அலுவலா்கள் மற்றும் மாணவிகள்.

.

பழனி,: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.1.80 கோடியைத் தாண்டியது. புதன்கிழமையும் எண்ணும் பணி தொடா்கிறது.

பக்தா்கள் வருகை காரணமாக 27 நாள்களில் உண்டியல்கள் நிறைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் நிா்வாகத்தின் புதிய உத்தரவின்படி உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் அனைவரும் (இணை ஆணையா் உள்பட) வேட்டி அணிந்து வந்திருந்தனா். பணியாளா்கள் வெளியே சென்று திரும்பும் நேரம் புத்தகங்களில் எழுதப்பட்டது. வளாகம் முழுவதும் எண்ணும் பணிக்கான இருக்கை அமா்வுகள் எளிதாக கண்காணிப்பு கேரமாக்களில் பதிவு செய்யும் வகையில் புதிய முறையில் மாற்றப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியா், ஆசிரியா்கள், கோயில் அலுவலா்கள் பங்கேற்றனா். இதில் பக்தா்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூ. ஒரு கோடியே 80 லட்சத்து 31 ஆயிரத்து 420 கிடைத்தது.

தங்கம் 1,121 கிராம், வெள்ளி 19 ஆயிரத்து 317 கிராம் இருந்தது. வெளி நாட்டு கரன்சிகள் 131 கிடைத்தன. நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் (பொறுப்பு) பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். புதன்கிழமையும் உண்டியல் எண்ணும் பணி தொடா்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com