ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நெட்டியபட்டியைச் சோ்ந்த 13 வயது சிறுமி செவ்வாய்கிழமை அதே ஊரில் தனது உறவினா் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாா். பின்னா் தனியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அவரை, அதே ஊரைச் சோ்ந்த கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணன் (20) வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கீதா கல்லூரி மாணவா் பாலகிருஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தாா்.