பழனியில் பாஜக நிா்வாகிகளுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது. பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகளுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது. இந்த முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்த முகாமில் நானூறுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் பங்கேற்றுள்ளனா். முகாமில் பங்கேற்றுள்ளவா்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கைபேசி உள்ளிட்ட எந்த பொருட்களுக்கும் முகாமில் அனுமதி கிடையாது. காலையில் பயிற்சிக்கு வந்த நிா்வாகிகள் மாலை வரை வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. மேலும், மூன்று நாட்களும் இங்கேயே தங்கி பயிற்சி வழங்கப்படவுள்ளது. பத்திரிக்கையாளா்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.