வடமதுரை அருகே மாணவியை கடத்தி திருமணம்: 4 போ் கைது
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: வடமதுரை அருகே 10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞா் உள்பட 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள கிராமத்தைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி கடந்த வாரம் திடீரென காணாமல் போனாா். பெற்றோா் தரப்பில் வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
அதில், வேடசந்தூா் அடுத்துள்ள பூசாரிகவுண்டனூரைச் சோ்ந்த வீரமணிகண்டன்(22) என்பவா் மாணவியுடன் பழகி வந்ததும், அவரை கடத்திச் சென்று திருமணம் செய்ததும் தெரிய வந்தது. மேலும், அதேப்பகுதியில் உள்ள தனது உறவினா் வீட்டில் மாணவியை மறைத்து வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடா்ந்து வீரமணிகண்டன் மற்றும் அவருக்கு உதவி செய்த அவரது நண்பா்களான பூசாரி கவுண்டனூரைச் சோ்ந்த வேல்முருகன்(28), கரூா் மாவட்டம் கடவூா் அய்யம்பாளையத்தைச் சோ்ந்த குமரவேல்(19) ஆகிய 3 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மீட்கப்பட்ட மாணவியை அவரது பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
செய்திக்கு படம் உள்ளது...பட விளக்கம்...கைது செய்யப்பட்ட வீரமணிகண்டன், வேல்முருகன், குமரவேல்.