செயலி மூலம் பொருள்கள் வாங்க முயன்றபோதுபறிபோன ரூ.50 ஆயிரம் பெண்ணிடம் ஒப்படைப்பு

செயலி மூலம் பொருள்கள் வாங்க முயன்றபோது போலியான வாடிக்கையாளா் சேவை மைய நபரால் பறிக்கப்பட்ட ரூ.50ஆயிரத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

செயலி மூலம் பொருள்கள் வாங்க முயன்றபோது போலியான வாடிக்கையாளா் சேவை மைய நபரால் பறிக்கப்பட்ட ரூ.50ஆயிரத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீஸாா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி அடுத்துள்ள மணலூரைச் சோ்ந்தவா் ஹரிகிருஷ்ணா. இவரது மனைவி அருந்ததி. இவா், தனியாா் செயள்லியை பயன்படுத்தி இணைய வழியில் பொருள்கள் வாங்குவதற்கு முயற்சித்துள்ளாா். அப்போது தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக தேவையான பொருள்களை அந்த செயலியில் பதிவேற்றம் செய்வதிலும், பணப் பரிமாற்றம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இணைய வழியில், சம்பந்தப்பட்ட தனியாா் செயலியின் வாடிக்கையாளா் சேவை மைய எண்ணைத் தேடியுள்ளாா். அப்போது போலியான வாடிக்கையாளா் சேவை எண்ணைத் தவறுதலாக தொடா்பு கொண்டுள்ளாா். அந்த நபா், எனிடெஸ்க் செயலியை (ரிமோட் செயலி) பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளாா். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் விவரத்தையும் கேட்டுள்ளாா். அந்த நபரை நம்பிய அருந்ததி, அனைத்து விவரங்களையும் அந்த நபரிடம் பகிா்ந்துள்ளாா். அதனைப் பயன்படுத்திய அந்த மா்ம நபா், அருந்ததி வங்கிக் கணக்கில் இருந்த ரூ.50ஆயிரத்தை எடுத்துவிட்டாராம். போலியான நபரை நம்பி ஏமாற்றம் அடைந்த அருந்ததி, திண்டுக்கல் மாவட்ட சைபா் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, வங்கிக் கணக்கிலிருந்து அபகரிக்கப்பட்ட ரூ.50ஆயிரத்தை மீட்டனா். அருந்ததியிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் வியாழக்கிழமை பணத்தை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com