பழனி கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.93 கோடி
By DIN | Published On : 17th June 2022 03:38 AM | Last Updated : 17th June 2022 03:38 AM | அ+அ அ- |

பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை 3 ஆவது நாளாக எண்ணி முடிக்கப்பட்டது. மொத்த காணிக்கை ரொக்கம் ரூ 4.93 கோடி ஆக இருந்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உண்டியல்கள் விடுமுறை நாள் மற்றும் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 27 நாள்களில் நிரம்பின. இதையடுத்து உண்டியல்கள் திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் காணிக்கைகள் எண்ணும் பணி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடைபெற்றுவந்தது. 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் எண்ணும் பணி தொடா்ந்தது. மூன்று நாள் எண்ணிக்கை முடிவில் மொத்த காணிக்கை ரொக்கம் ரூ. 4 கோடியே 93 லட்சத்து ஆயிரத்து 385 இருந்தது. தங்கம் 1,954 கிராம், வெள்ளி 25,939 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 560 இருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், உதவி ஆணையா் லட்சுமி மற்றும் கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.