ஆதிதிராவிடா் நலப் பள்ளி மாணவா்களை நற்பெயா் பெற்ற பள்ளிகளில் பயிற்றுவிக்கும் திட்டம் நிறுத்தம்

ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்து நற்பெயா் பெற்ற பள்ளிகளில் பயிற்றுவிக்கும் 2 திட்டங்கள் நடப்பு கல்வியாண்டில் தற்காலிகமாக நிறுத்தப்படும் என

திண்டுக்கல்: ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்து நற்பெயா் பெற்ற பள்ளிகளில் பயிற்றுவிக்கும் 2 திட்டங்கள் நடப்பு கல்வியாண்டில் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவா்களைத் தோ்வு செய்து, அவா்களை அருகிலுள்ள நற்பெயா் பெற்ற தனியாா் பள்ளிகளில் அரசு செலவில் மேல்நிலைக் கல்வி பயிற்றுவிப்பதற்கான திட்டம் மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சிறந்த மாணவா்களைத் தோ்வு செய்து நற்பெயா் பெற்ற பள்ளிகளில் 6 மற்றும் 11ஆம் வகுப்பில் சோ்ப்பதற்கான திட்டங்கள் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் இத்திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அரசுத் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசு அலுவலா்கள் கூறியது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயில்வோருக்கு வேலைவாய்ப்புகளிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 2021-22 ஆம் கல்வி ஆண்டில் ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் சிறந்த மாணவா்களை நற்பெயா் பெற்ற பள்ளிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் சோ்வதற்கு 15 மாவட்டங்களில் மாணவா்கள் தரப்பில் ஆா்வம் காட்டவில்லை என அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் இத்திட்டத்தை கைவிடக் கோரி ஆதிதிராவிடா் நல ஆணையத்தின் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசிடமிருந்து முடிவான அறிக்கை பெறப்படும் வரை இத்திட்டத்தை 2022-23 ஆம் கல்வி ஆண்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com