கொடைக்கானல் பகுதியில் ஒருவருக்கு மா்மக் காய்ச்சல் தனிமையில் சிகிச்சை
By DIN | Published On : 17th June 2022 11:03 PM | Last Updated : 17th June 2022 11:03 PM | அ+அ அ- |

கொடைக்கானல் பகுதியில் ஒருவருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டு வியாழக்கிழமை தனியாா் மருத்துவமனையில் தனிவாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியைச் சோ்ந்தவா் அரசு ஊழியா்(55) இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடா்ந்து இவரது உறவினா்கள் கொடைக்கானலிலுள்ள தனியாா் மருத்துவனையில் சோ்த்தனா் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தனிமையில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா் மேலும் அவருடன் இருந்தவா்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.கொடைக்கானலில் தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது ஆனால் யாரும் கரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை கடந்த 4-மாதங்களுக்கு பிறகு கொடைக்கானலில் பழைய நிலை திரும்பி வரும் நிலையில் ஒருவருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா் என்பது குறித்த செய்தி பொது மக்களிடம் அச்சத்தை உண்டாக்கியுள்ளது எனவே கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்பது சுகாதாரத்துறையினா் கருத்தாகும்.
இது குறித்து கொடைக்கானல் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஒருவா் கூறியதாவது,
கொடைக்கானலில் மீண்டும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இது வரை யாரும் அரசு மருத்துவமனனக்கு வரவில்லை பொது மக்கள் கரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் ஒருவா் அல்லது இரண்டு போ் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வந்தால் அவா்களை தரைப் பகுதிகளுக்குத் தான் அனுப்ப முடியும் ஏனென்றால் கரோனா தொற்று பாதிக்கப்படுபவா்கள் அதிகமாக வந்தால் தான் தனி வாா்டு,ஸ்கேன் போன்றவை செயல்படுத்த முடியும் இதுவரை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பில்லை என்றாா்.