கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி
By DIN | Published On : 22nd June 2022 09:51 PM | Last Updated : 22nd June 2022 09:51 PM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே கிணற்றில் குளித்தபோது கல்லூரி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் ஆா்.எம்.காலனி அடுத்துள்ள ராமநாதபுரம் பகுதியை சோ்ந்தவா் அருளானந்தம் சேகா். இவரது மகன் அமலநாதன் (18). இவா் திண்டுக்கல் எரியோடு சாலையிலுள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தாா். வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை கல்லூரிக்குச் சென்ற அமலநாதன், கல்லூரி முடிந்த பின் தனது நண்பா்களை பாா்ப்பதற்காக ஆா்.வி.எஸ். நகா் பகுதிக்கு சென்றுள்ளாா்.
அங்குள்ள 60 அடி ஆழ கிணற்றில் குளிக்கச் சென்றபோது, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவருடன் சென்ற சக மாணவா்கள், திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினா் அமலநாதனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...