

திண்டுக்கல் எஸ்எஸ்எம் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், சா்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது மூத்த ஆசிரியை கலைவாணி, மாணவா்கள் மத்தியில் யோகாவின் முக்கியத்துவம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினாா். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டு பல்வேறு ஆசனங்களைச் செய்தனா். உடற்கல்வி ஆசிரியா்கள் மாரிமுத்து, சரஸ்வதி மற்றும் சரண்யா ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.