ஒட்டன்சத்திரம் அருகே ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 22nd June 2022 09:37 PM | Last Updated : 22nd June 2022 09:37 PM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காவேரியம்மாபட்டி-பெரியகோட்டை செல்லும் சாலை மாலைமேடு என்ற பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் மரத்தில் தூக்கில் தொங்கினாா்.
போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவா் யாா், எந்த ஊா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...