பழனி மலைக் கோயிலில் அமைச்சா் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 02nd May 2022 11:08 PM | Last Updated : 02nd May 2022 11:08 PM | அ+அ அ- |

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், தமிழக செய்தி தொடா்புத் துறை அமைச்சா் வெள்ளக்கோயில் சாமிநாதன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
பழனி மலைக் கோயிலுக்கு விஞ்ச் மூலம் சென்ற அமைச்சா் வெள்ளக்கோயில் சாமிநாதன், ஆனந்த விநாயகரை தரிசனம் செய்தாா். பின்னா், மூலவா் தண்டாயுதபாணியை ராஜஅலங்காரத்தில் தரிசனம் செய்து, அா்ச்சனைகள் செய்தாா். அவருக்கு, கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
அமைச்சருடன், பழனி கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் செந்தில்குமாா், வட்டாட்சியா் சசி, ஆய்வாளா் உதயக்குமாா் உள்ளிட்ட பலா் இருந்தனா்.