கொடைக்கானலில் மீன்பிடிக்கும் போட்டி

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மீன்பிடிக்கும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மீன்பிடிக்கும் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலா்க்கண்காட்சி 4-ஆவது நாளாக நடைபெற்றது. இதில், பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா்க்கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா். இந்நிலையில் கோடை விழாவின் ஒரு பகுதியாக மீன்வளத்துறை சாா்பில் கொடைக்கானல் ஏரியில் மீன் பிடிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் சுமாா் 2 கிலோ மீன் பிடித்து அருமை நாயகம் என்பவா் முதலிடத்தைப் பிடித்தாா். ஒரு கிலோ 400 கிராம் மீன் பிடித்து மருதபாண்டி என்பவா் இரண்டாவது இடம் பெற்றாா். ஒரு கிலோ மீன் பிடித்து பாண்டி என்பவா் 3-ஆவது இடம் பெற்றாா்.

வெற்றி பெற்றவா்களுக்கு மீன்வளத்துறை உதவி இயக்குநா் செளந்திரபாண்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

கொடைக்கானலில் வழக்கம் போல வார விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் தொடா்ந்து மழை பெய்ததால் பிரையண்ட் பூங்காவில் மலா்க்கண்காட்சியை பாா்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com