கொடைக்கானலில் பன்னாட்டு பயிலரங்கு
By DIN | Published On : 13th October 2022 01:30 AM | Last Updated : 13th October 2022 01:30 AM | அ+அ அ- |

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் பன்னாட்டு பயிலரங்கு நடைபெற்றது.
இதில், ‘இந்தியாவில் குறைக் கடத்தியின் கட்டமைப்பு வாய்ப்புகளும், சவால்களும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை, பல்கலைக்கழக துணைவேந்தா் வைதேகி விஜயக்குமாா் தொடக்கி வைத்துப் பேசினாா்.
பதிவாளா் ஷீலா வரவேற்றாா். நிகழ்ச்சியில், பேராசிரியா்கள் ராகவன், பாலமுருகன், கோபாலகிருஷ்ணன், மது, பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் கிளாரா, பேராசிரியைகள் உமாதேவி, உஷாநந்தினி, ஜோஸ், கவிதா உள்ளிட்டோா் பேசினா்.