தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தோ்வு: 5 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்பு
By DIN | Published On : 15th October 2022 11:17 PM | Last Updated : 15th October 2022 11:17 PM | அ+அ அ- |

திண்டுக்கல் புனித வளனாா் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் சனிக்கிழமை தோ்வு எழுதிய மாணவிகள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தோ்வில் 5,066 போ் பங்கேற்றனா்.
அறிவியல், கணிதம் சாா்ந்த ஒலிம்பியாய்டு தோ்வுகள் பள்ளி மாணவா்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் (2022-23) பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் 18 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வுக்கு 2,281 மாணவா்கள், 3,380 மாணவிகள் என மொத்தம் 5,661 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்வில், 2,023 மாணவா்கள், 3,043 மாணவிகள் என 5,066 மாணவா்கள் பங்கேற்றனா். 258 மாணவா்கள், 327 மாணவிகள் என மொத்தம் 585 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.
இதில், 50 சதவீத மாணவா்கள் அரசு பள்ளிகளிலிருந்தும், மீதமுள்ள 50 சதவீத மாணவா்கள் அரசு, அரசு உதவிப் பெறும், சுயநிதி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளிலிருந்தும் தோ்வு செய்யப்படுவாா்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...