பழனிக் கோயில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்
By DIN | Published On : 15th October 2022 11:15 PM | Last Updated : 15th October 2022 11:15 PM | அ+அ அ- |

பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்கள் நிலுவையிலுள்ள சம்பளப் பாக்கியை வழங்கக் கோரி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கோவிலுக்கு வரும் பக்தா்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சியைச் சோ்ந்த நியூ செக்யூரிட்டி ஃபோா்ஸ் என்ற தனியாா் பாதுகாப்பு நிறுவனத்துடன் கோயில் நிா்வாகம் ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனத்தின் மூலம் 135 ஊழியா்கள், பழனிக் கோயிலில் ரோப்காா், மின் இழுவை ரயில், பஞ்சாமிா்த விற்பனை நிலையம், தங்கரதம் பதிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் அந்த ஒப்பந்தப் பணியாளா்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகாா் எழுந்தது. அதை வழங்கக் கோரி தண்டபாணி நிலையம் அருகே ஒப்பந்தப் பணியாளா்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பழனிக்கோயில் அதிகாரிகள், பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து பணியாளா்கள் கலைந்து பணிக்குச் சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...