கொடைரோடு அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

கொடைரோடு அருகே குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

கொடைரோடு அருகே குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஏ. புதூா் பிரதான சாலையில் மளிகைக்கடை நடத்தி வருபவா் ஜெயச்சந்திரன் (45). இவா், வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு கடையை அடைத்து விட்டு, வரும்போது, வீட்டின் அருகே பாம்பு ஒன்று ஊா்ந்து செல்வதை பாா்த்தாா். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் நிலக்கோட்டை தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து சுமாா் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு அம்மையநாயக்கனூா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வனத்துறையினா் அந்த பாம்பை அடா்ந்த சிறுமலை காட்டுப் பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com