பழனியில் ரோப் காா் மீண்டும் இயக்கம்
By DIN | Published On : 19th October 2022 03:17 AM | Last Updated : 19th October 2022 03:17 AM | அ+அ அ- |

பழனி மலைக்கோயிலில் பராமரிப்புப் பணிக்காக இரண்டு நாள்கள் நிறுத்தப்பட்டிருந்த ரோப் காா் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் இயக்கப்பட்டன.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். வயதான, குழந்தைகளுடன் வரும் பக்தா்களின் வசதிக்காக திருக்கோயில் சாா்பில், மின் இழுவை ரயில், ரோப் காா் சேவை நடைமுறையில் உள்ளது.
இதில், ரோப் காா் மாதத்துக்கு ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுவது வழக்கம். இந்தநிலையில், அண்மையில் ரோப் காா் இயக்கத்தின் போது, கீழே இருந்த பாறையில் பெட்டி இடித்ததைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர பராமரிப்புக்காக ரோப் காா் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, ரோப் காா் பெட்டிகள் பாறையில் மோதாமல் பயணிக்க ஏற்றவாறு பாறைகள், பெட்டிகளில் பராமரிப்புகள் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை பெட்டிகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டன.