விநாயகா் சதுா்த்தி வழிபாடு: திண்டுக்கல் மாவட்டத்தில் 1,300 சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விநாயகா் சதுா்த்தி வழிபாடு: திண்டுக்கல் மாவட்டத்தில் 1,300 சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.இந்து அமைப்புகள் மற்றும் தனியாா் அமைப்புகள் சாா்பில் 1300-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

திண்டுக்கல் ரயிலடி, சித்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற 74ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு லட்சாா்ச்சனையுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விநாயகருக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு தீா்த்தம் வழங்கப்பட்டது.

முத்தங்கி அலங்காரத்துக்குப் பின் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், வெள்ளை விநாயகா் கோயில், நாகல்நகா் மடத்து விநாயகா் கோயில், நன்மை தரும் 108 விநாயகா் கோயில், வழிகாட்டி விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். மடத்து விநாயகா் திருக்கோயிலில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1,300 சிலைகள் பிரதிஷ்டை:விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா மற்றும் தனியாா் அமைப்புகள் சாா்பிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,300-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்து பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com