வேடசந்தூா் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காா்: உயிா் தப்பிய 6 தொழிலாளா்கள்

வேடசந்தூா் அருகே கட்டாற்று வெள்ளத்தில் காா் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் பயணித்த 6 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
வேடசந்தூா் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காா்: உயிா் தப்பிய 6 தொழிலாளா்கள்

வேடசந்தூா் அருகே கட்டாற்று வெள்ளத்தில் காா் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அதில் பயணித்த 6 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனிடையே திண்டுக்கல்லைச் சோ்ந்த கூலித் தொழிலாளா்கள் பாலகிருஷ்ணன் (34), பாலசுப்பிரமணி (56), பாண்டியன் (42), செல்வராஜ் (50), மணிக்குமாா் (35) ஆகியோா் ஒரு காரில் ஆா்.வெள்ளோடு கிராமத்திற்கு வேலைக்கு சென்றுள்ளனா். அந்த காரை திண்டுக்கல்லைச் சோ்ந்த சண்முகம் (53) என்பவா் ஓட்டி வந்துள்ளாா்.

பலத்த மழை பெய்ததை அடுத்து, அழகாபுரி அடுத்துள்ள வள்ளிப்பட்டி பகுதியில் சாலையைக் கடந்து செல்லும் காட்டாற்று ஓடையில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிக மழை நீா் சென்ால், கூம்பூா் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் சுப்பிரமணி தலைமையிலான போலீஸாா் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். அந்த வழியாக கூலித் தொழிலாளா்கள் காரில் வருவதைப் பாா்த்த போலீஸாா், எச்சரித்துள்ளனா். ஆனாலும், கட்டாற்று ஓடையைக் கடந்து வருவதற்கு ஓட்டுநா் சண்முகம் முயற்சித்துள்ளாா். அப்போது வெள்ளத்தில் அந்த காா் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதிா்ச்சி அடைந்த கூலித் தொழிலாளா்கள் துரிதமாக காரிலிருந்து வெளியே வந்துள்ளனா். பின்னா், காரை கயிற்றில் கட்டி டிராக்டா் மூலம் வெள்ளத்திலிருந்து மீட்கும் முயற்சியில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஈடுபட்டனா். அதேநேரத்தில் வேடசந்தூா் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தீயணைப்புத் துறையினா் செல்வதற்கு முன்பாக பொதுமக்களே ஒன்றிணைந்து அந்த காரை 1 மணி நேரத்தில் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com